• May 18 2024

மறுபடியும் லீக்கான விஜய்யின் வாரிசு பட காட்சி- புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் வாரிசு படம் குடும்ப சென்டிமென்ட் கதை என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஒரு நட்சத்திர பட்டாமளே நடித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இது உண்மை தான். பிறந்தநாளான நேற்று முதல் வாரிசு பட செட்டில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக லேட்டஸ்டாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் தற்போது நடைபெற்று வரும் ஷுட்டிங்கில் விஜய் - ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்ட பல முக்கியமான சீன்கள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் படத்தில் நடிக்கும் அனைவரும் இந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் வாரிசு ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் இப்போதே பெரும்பாலான சீன்கள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.மேலும் இதில் ஒரு கேரக்டர் மாஸ் ஹீரோ கேரக்டர் என்றும், இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஆப் டெவலப்பர் வேலை செய்பவராக நடித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் நடிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ சமூகவலைத்தளத்தில் லீக்காகி உள்ளது. இதில் விஜய், பிளாக் அண்ட் ஒயிட் கோட் ஷுட்டில் மாடியில் நடந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் மொபைலில் வீடியோ எடுத்த யாரோ ஒருவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ஒருபுறம் அதிகம் பகிரப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் இதை நீக்கும் படி விஜய் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.இது போன்ற ஷுட்டிங் வீடியோக்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் நடந்த ஷுட்டிங் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் லீக்கானதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, கோபமடைந்தனர். இதனால் அதே காட்சிகளை வேறு விதமாக டைரக்டர் மீண்டும் எடுக்க முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் மீண்டும் மீண்டும் வாரிசு படத்தின் ஷுட்டிங் வீடியோக்கள் கசிந்து வருகிறது.

இதனால் டென்ஷனான ரசிகர்கள், இந்த அளவிற்கா பாதுகாப்பில் கோட்டை விடுவீர்கள் என படக்குழுவினரை விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் சிலர், இந்த வீடியோவில் இருப்பது விஜய் போல் இல்லை. ராம் சரண் போல் உள்ளது. விட்டால் ஷுட்டிங் முடிவதற்கு முன்பே வாரிசு படத்தின் மொத்த படத்தையும் ரிலீஸ் செய்து விடுவார்கள் போல என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement