• May 18 2024

விஜய்யின் 'நா ரெடி' பாடல் ப்ரோமோ வீடியோ படைத்த சாதனை... 18மணி நேரத்திற்குள் பல மில்லியன் பார்வையாளர்கள்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.


இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'நா ரெடி' பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த பாடலின் ப்ரோமோவை நேற்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


இந்த பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோருடன் இணைந்து  பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் முதல் சிங்கிள் ட்ராக்காக நான் ரெடி தான் வருவாய் என்ற பாடல் நாளை விஜய் பிறந்தநாள் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தப் பாடல் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியானது.

அந்தவகையில் இந்த பாடல் ப்ரோமோ வீடியோ வெளியான 18 மணி நேரத்தில் 5.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement