• Oct 30 2024

ரீல்ஸ வீடியோ செய்து அசத்தும் விஜய்யின் அம்மா ஷோபனா- அடடே செம சூப்பராக இருக்கே- வைரலாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் விஜய் . இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68 வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றது. இது தவிர அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அண்மையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட தன் ரசிகர்களை வைத்து பல்வேறு உதவிகளை செய்தார்.


மேலும் கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இவர் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துக்கள் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது.

விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் 78 வயதிலும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். அம்மா ஷோபாவும் அடிக்கடி மீடியாவில் பேட்டி கொடுத்து வருகிறார். விஜய் பற்றி அவர் கூறும் விஷயங்களும் வைரல் ஆகின்றன.

தற்போது விஜய்யின் அம்மா ஷோபா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது. "So beautiful , so elegant, just looking like a WOW" என ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவில் தான் அவர் இருக்கிறார்.



Advertisement