• Jan 19 2025

நீ சீக்கிரம் சென்று விட்டாய், அம்மா இங்க தான் இருக்கிறேன்- விஜய் ஆண்டனியின் மனைவி போட்ட எமோஷன் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவருக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள்கள்  இருந்தனர். இதில் மூத்த மகளான மீரா கடந்த ஒரு ஆண்டாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில்  கடந்த செப்டம்பர் 19ம் தேதி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். 

மகளின் இழப்பு விஜய் ஆண்டனியையும் அவரது மனைவியையும் கடுமையாக பாதித்திருக்கிறது. விஜய் ஆண்டனி உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றார். ஒருவழியாக மெல்ல மெல்ல மீண்டிருக்கும் விஜய் ஆண்டனி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். 


இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா மீரா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மீரா தங்கமே உனது பியானோ உன்னுடைய தொடுதலுக்காக ஏங்கி காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்றுவிட்டாய். இந்த உலகம் உனக்கானது இல்லை. 


 ஆனால் உனது அம்மாவாகிய நான் இன்னும் இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான கான்செப்ட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன்னை சந்திக்கும்வரை சாப்பிட்டுவிட்டு நன்றாக இரு. லாராவும் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறார்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவுக்கு பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.




Advertisement

Advertisement