• Sep 21 2024

ஒரே படத்தில் விஜய் சேதுபதி - சூர்யா.. குடும்பமே எதிர்பார்க்கும் திரைப்படம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!


ஒரே படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா நடித்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த படத்தை விஜய் சேதுபதியின் குடும்பமே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையில் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சில முக்கிய நடிகர், நடிகைகள் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர் ஆகியோர்களுக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



இந்த நிலையில் ’விடுதலை 2’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவுக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்து இருப்பதாகவும் அந்த கேரக்டர் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. முதல் முதலாக விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா ஒரே படத்தில் நடித்திருப்பதை அடுத்து இந்த படத்தை அவரது குடும்பமே மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா ஏற்கனவே தனியாக ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு முன்பே அவரது நடிப்பு எப்படி என்பதை ’விடுதலை 2’ படத்தின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement