• Apr 28 2024

எந்த ஒரு டாப் தமிழ் நடிகரும் செய்யாத வசூல் சாதனை செய்த பீஸ்ட் படம்- இதனால் தான் விஜய் No.1 இடம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்து தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்ததோடு சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் வெளியான முதல் ஷோவில் இருந்து மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று வந்ததோடு பாக்ஸ் ஆபிசிலும் பின்னடைவைச் சந்தித்தது.

இதனால் விஜய்யின் திரைப்பயணத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்த திரைப்படங்களில் ஒன்றாக இணைந்தது பீஸ்ட் திரைப்படம். சமீபத்தில் கூட ஹிந்தி பார்வையாளர்கள் பீஸ்ட் படத்தின் காட்சியை பதிவிட்டு விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது என்னதான் விஜய் பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் No.1 என்பதை நிரூபித்துள்ளது. அதாவது இத் திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மொத்தம் ரூ.60 கோடி, உலகளவில் மொத்தமாக ஷேர் ரூ.110 கோடி என்பது தெரியவந்துள்ளது. இது கடைசியாக வெளியான எந்த ஒரு டாப் தமிழ் நட்சத்திரமும் செய்திராத வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement