• Jun 16 2024

வாரிசு ஆடியோ லாஞ்சை முடித்த கையோடு லண்டன் செல்லும் விஜய்...ஏன் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். மேலும் இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். 


விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் தொடங்க உள்ளது. 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் டிசம்பர் 23 அல்லது 24-ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு நடக்கும் என்றும், அதன் பிறகு விஜய் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் லண்டன் சென்று அவரது பெற்றோரை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement