• Jan 19 2025

விஜய் ஆண்டனியின் 'லைவ் கான்செப்ட்'.. விஷாலுடன் இறங்கி குத்திய ADK.. வைரல் வீடியோ

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி தற்போது வரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

மதகஜ ராஜா திரைப்படத்தில் மை டியர் லவ்வர் என்ற பாடலை விஷால் பாடி இருந்தார். இந்த பாடலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இருந்தது. சமீபத்தில் இந்த  படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது விஷாலுக்கு கைநடுக்கம் ஏற்பட்ட விடயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

d_i_a

இதைத் தொடர்ந்து வைரஸ் காய்ச்சலில் இருந்து உடல்நலம் தேறிய விஷால், மீண்டும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது எனக்கு கை நடுங்கவில்லை.. அப்படி ஏதும் சந்தேகம் என்றால் எனக்கு நேரடியாக போன் பண்ணி விசாரிங்கள் என பதிலடி கொடுத்திருந்தார்.


இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற விஜய் ஆண்டனியின் லைவ் கான்செப்ட்டில் விஷால் கலந்து கொண்டுள்ளார். மேலும் இலங்கையின் ராப் பாடகரும் பிக்பாஸ் பிரபலமும் ஆன ADKயும் இந்த கான்செப்டில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

இதன்போது விஷால் நாக்கு முக்க பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ, அவர் உற்சாகத்தில் நடனம் ஆடிப் பாடிய வீடியோவும் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதனால் பழைய விஷாலை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.'


Advertisement

Advertisement