• Jan 19 2025

தினேஷின் கல்யாண வாழ்க்கை குறித்து தவறாகப் பேசி விசித்ரா- கடும் கோபத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் டைட்டில் வின்னராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இப்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடந்து வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக இருப்பவர் தான் தினேஷ். இவர் தன்னுடைய காதல் மனைவி ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.அவர்கள் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.

தனது வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக நடந்த சம்பவங்களை தினேஷ் அடிக்கடி சோகமாக பிக் பாஸ் ஷோவில் பேசி வருகிறார்.

ஆனால் வெளியில் இருக்கும் ரச்சிதா மஹாலக்ஷ்மி தான் அனுபவித்த வலி எனக்கு தான் தெரியும் என தொடர்ந்து பதில் கொடுத்த வருகிறார்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா தினேஷின் பர்சனல் வாழ்க்கை பற்றி பேசி மோசமாக பேசி இருக்கிறார்.


'நான் fake ஆக இருக்கிறேன் என என்னை பற்றி தினேஷ் தொடர்ந்து பேசுகிறார். ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு pure லவ் கிடைத்திருக்காது என நினைக்கிறேன். அப்படியே கிடைத்திருந்தாலும் அதை அவர் acknowledge செய்திருக்க மாட்டார்.'

"அதை respect செய்திருக்க மாட்டார். எல்லாமே நடிப்பா தெரியுது அவருக்கு. ரியல் லவ், affection என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. He doesn't deserve pure love" என விசித்ரா கூறி இருக்கிறார்.இதனால் தினேஷ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement