• Sep 30 2023

பிரபுதேவாவை உயிருக்கு உயிராக காதலித்த வனிதா- மகளுக்காக விஜயகுமார் போட்ட ஐடியா- என்ன நடந்திச்சு தெரியுமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த வனிதா குடும்ப வாழ்க்கை சர்ச்சைகளும், பிரச்சனைகளும் நிறைந்ததாக தான் இருந்து வருகிறது. அதனாலேயே இணையத்தில் அடிக்கடி வனிதாவின் பெயர் அடிபட்டுக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் நடிகை வனிதா நடிகர் ஆகாஷை 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் அவரை பிரிந்து விவாகரத்து செய்து விட்டார். 


இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் பிரிந்து பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்து தற்பொழுது தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

தற்பொழுது படவாய்ப்புக்களைப் பெற்று நடித்து வரும் இவர் குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. அதாவது வனிதா நடிகர் பிரபுதேவாவின் தீவிர ரசிகையாக இருந்திருக்கின்றார்.இதனால்  அவருடைய படங்கள் ரிலீஸானால் அது தொடர்பான தகவல்களை சேகரிப்பாராம்.

ஒருமுறை வனிதாவின் அப்பா விஜயகுமார் இவருடைய காதலை பார்த்து பிரபுதேவாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அவர் வருவதை அறிந்து உற்சாகமாக வனிதா நிறைய அசைவ உணவை சமைத்து வைத்துள்ளார். ஆனால் பிரபுதேவா அசைவு உணவை உண்ண மாட்டார் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதை காட்டாமல் முட்டையை சமைத்து பரிமாறினாராம்.


 மேலும் சில நாட்களுக்குப் பிறகு வனிதாவும் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டாராம்.அந்த அளவிற்கு பிரபுதேவாவின் மீது பைத்தியமாகவே வனிதா இருந்துள்ளாராம் என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














 


Advertisement

Advertisement

Advertisement