• May 10 2024

விஜயகாந்தின் உறவினர்களிடம் தாறுமாறாக அடி வாங்கிய வடிவேலு- திடுக்கிடும் தகவலைக் கூறிய பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒரு தலை ராகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர்தான் தியாகு. இப்படத்தினைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இது தவிர சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் ஓர் பேட்டியில் பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது பொதுவாக சினிமா துறையில் உள்ள அனைவரும் நடிகர் விஜயகாந்த் மீது பேரன்பு வைத்துள்ளனர். காரணம் அவர் சிறிய தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவரையும் சமமாக நடத்துவார். நடிகர் வடிவேலுவையும் ஆரம்ப காலகட்டத்தில் அப்படித்தான் நடத்தியுள்ளார்.

சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு ஒப்பந்தமான போது, அப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் விஜயகாந்த் தான் கவுண்டமணியிடம் பேசி சம்மதிக்க வைத்து வடிவேலுவை அதில் நடிக்க வைத்தார்.

அதன் பின்னர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தான் வடிவேலு தனது திறமையை நிரூபித்து இன்று உச்சத்தை அடைந்துள்ளார். இந்நிலையில் பணமும் புகழும் அதிகமாக விஜயகாந்த் வசித்த அதே தெருவில் சொந்த வீடு வாங்கினார் வடிவேலு. ஒருமுறை விஜயகாந்தின் உறவினர் ஒருவர் இறந்தபோது அவரது உறவினர்கள் வடிவேலுவின் வீட்டு முன்பு கார் நிறுத்தியிருக்கிறார்கள்.

அப்போது காரை எடுக்கும்படி வடிவேலு கெட்ட வார்த்தை பேசியதாகவும், ஒரு கட்டத்தில் விஜயகாந்த் அவர்களை அவரது உறவினர் முன்பு வடிவேலு திட்டியதாகவும் இதனால் கடுப்படைந்த விஜயகாந்தின் உறவினர்கள் மற்றும் அபிமானிகள் வடிவேலுவை அடித்து விட்டதாகவும், அதனை இரவு 3 மணிக்கு தியாகுவிற்கு ஃபோன் பண்ணி வடிவேலு புலம்பியதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த தகவலை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு கூறியதால் வடிவேலுவிற்கு பாதுகாப்பு கொடுக்கும்படி தியாகு தான் கூறியிருந்தாராம். இந்தப் பிரச்சனை நடந்து முடிந்த பிறகு தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக பேசுவதாக அவரை தரக்குறைவாக பேசி விமர்சித்திருப்பார் வடிவேலு.

அதன் பின்னர் சினிமா துறையில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் விஜயகாந்த் மீது திரைத் துறையினர் வைத்திருக்கும் அபிமானம். சமீபத்திய பேட்டிகளில் தனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்ற மன வருத்தத்தை வடிவேலு தெரிவித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க வடிவேலுவை நடிக்கச் சொல்லுங்கள் இப்படியே இருக்க வேண்டாம் என்று விஜயகாந்த் தனது அபிமானிகளிடம் சொன்னதாகவும் திரைத் துறையினர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement