• Apr 28 2024

''சிங்கம் போல படம் முழுவதும் வடிவேலு தான் நிறைஞ்சிருக்காரு''.- மாமன்னனை பாராட்டிய வசந்தபாலன்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் மாமன்னன் படத்தை பாராட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாமன்னன் தமிழில் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார்.மனமார்ந்த வாழ்த்துகள்.

வடிவேலு அவர்களுக்கு நடிகனாக ஒரு பெரிய மடைமாற்றம்.அவரே நம்பாத ஒரு மாற்று பாதை.அந்த பாதையில் சிங்கமாக நடந்து செல்கிறார்.காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை,அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிப்படுத்திய வடிவேலு  தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்.

மதயானை ஃபகத் பாசில்: பகத் பாசில் ஒடிசலான தேகத்துடன் மதயானை போன்ற தன் ஆளுமையால் கதாபாத்திரத்தை ஆள்கிறார். 

உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் பொது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள் நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும் வாழ்த்துகள் மாரி செல்வராஜ் யாருக்காகவும் தன் தனித்துவமான பாதையை விட்டுத் தராத வைராக்கியத்திற்கு பிடிவாதத்திற்கு" என குறிப்பிட்டிருக்கிறார்.



.

Advertisement

Advertisement

Advertisement