• Jan 19 2025

வந்த கோபத்துக்கு ஓங்கி மிதிச்சி இருப்பன்... வாய்ப்பு தந்த கேப்டனை மறந்த வடிவேலு... கோபத்தில் மீசை ராஜேந்திரன்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கிய நிலையில் தற்போது அவரின் இறுதி அஞ்சலிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்களும்,தொண்டர்களும், சினிமா பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். 


இந்நிலையில் சமூகவலைத்தளங்கள் எங்கிலும் கடந்த 2 நாட்களாக விஜயகாந்த் தொடர்பான செய்திகள் தான் அதிகள் பரவலாக பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. இந்நிலையில் தற்போது மீசை ராஜேந்திரன் அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 


ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட மீசை ராஜேந்திரன் அவர்கள் விஜய்காந்த் அவர்களின் 3 படத்தில் ஆரம்பத்தில் சின்ன ரோல்களில் நடித்தவர் தான் வடிவேலு என்னை பல முறை கூப்பிட்டு அவமானம் படுத்தியுள்ளார். என்னை ஒருமுறை கூப்பிட்டார் நான் அவரை பார்க்க சென்றிருந்தேன்.


அப்போது கையை கட்டிக்கொண்டு காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு அமைந்திருந்தார். நான் போயிட்டு அண்ணே வர சொன்னிங்க என்று கேட்க கேப்டனோட ஆளுங்களுக்கு எல்லாம் வாய்ப்பு தரமாட்டேன் என்று சேரில் தெனாவட்டாக அமர்ந்தபடி பேசினார்.


கேப்டன் விஜயகாந்த அவர்கள் தான் ஆரம்பத்தில் வடிவேலு நடிக்க வந்த போது மாத்த துணி இல்லாமல் இருந்தார். 7 வேட்டி 7 சட்டை வாங்கி கொடுத்தார். இப்படி வாய்ப்பு கொடுத்தவரை இன்று வடிவேலு மறந்துவிட்டார் என்றும் அவர் இப்படி பேசும் போது எனக்கு சரியான கோபம் வந்தது, அப்படியே ஒரு மிதி மிதிப்பம் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் அப்போது ரொம்ப பெரிய இடத்தில் இருந்தார் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்றும் கூறினார் மீசை ராஜேந்திரன். 

Advertisement

Advertisement