• Jan 19 2025

அவர் எல்லோர் மீதும் கோபப்படுவார்... அதற்கு இதுதான் காரணம்... கேப்டன் விஜயகாந்த் குறித்து உண்மையை கூறிய ரஜனிகாந்த்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

"மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு விஜயகாந்த் பற்றி பேசனும் என்று சொன்னா பேசிட்டே  இருக்கலாம் .  அவ்வளவு இருக்கு முக்கியமா அவருடைய நட்பு  நட்புக்கு வந்து இலக்கணம் விஜயகாந்த் அவர்கள். அவருடன் ஒரு தடவை பழகினால் அதை மறக்கவே முடியாது" .


"அவருடைய அன்புக்கு வந்து எல்லாருமே அடிமையாகிடுவாங்க. அதனாலே தான் அவருக்கு அவ்வளவு நண்பர்கள்.  அவருக்காக உயிரையே கொடுக்க ஆயத்தமாக இருந்தாங்க , இருக்கிறாங்க. நண்பர்கள் மேலேயும் அவர் கோவப்படுவார் . அரசியல்வாதிகள் மேலேயும் கோவப்படுவார் , ஊடகம் உங்க மேலையும் கோவப்படுவார் . ஆனா யாருக்கும் அவர் மேல கோவம் வராது . ஏன் என்று சொன்னா அவருடைய கோவத்துக்கு பின்னால ஒரு நியாயமான காரணம் இருக்கும் . சுயநலம் இருக்காது" .


ஒரு அன்பு இருக்கும் அவர் தைரியத்துக்கும் வீரத்துக்கும்  உதாரணமானவர் அவரோட பழகின எல்லாருக்குமே அவர் கொடுத்த நினைவுகள் இருக்கும் அதே மாதிரி தான் எனக்கும் நிறைய இருக்கு  அதில முக்கியமான 2 ஐ கூறுகின்றேன் .


"எனக்கு ஒரு நாள் உடம்பு ரொம்ப சரியில்லாம வைத்தியசாலையில சுய நினைவு இல்லாம இருக்கும் போது நிறைய மக்கள் ,ரசிகர்கள் ,ஊடகம் அப்பிடி எல்லாரும் அங்க வந்து நின்று தொந்தரவா இருந்திச்சி கட்டுப்படுத்தவே முடியல விஜயகாந்த் அங்க வந்து 5 நிமிஷத்தில் எல்லாரையும் அனுபிட்டாங்க . என்னைய நலம் விசாரிப்பாரு இப்பிடி நிறைய விஷயங்கள் செஞ்சிருக்காரு .அந்தமாறி ஒருவரின் மறைவை பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று சொல்லி கண்கலங்கினார் ரஜினிகாந்த்.

Advertisement

Advertisement