• Jan 19 2025

காசு கொடுத்து Titel Win பண்ணலாம்? இதுக்காக PR கம்பெனி பயங்கரமா வேலை செய்யும்...! அதிர்ச்சி தகவலொன்றை சொல்லிய வனிதா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியொன்றில், காசுக்காக அனைத்து ஓட்டிங்கையும் மாத்துறாங்க, விஜய் டிவி இத பத்தி ஆராய்ந்து முடிவு எடுக்கணும் என அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்லியுள்ளார்.


அதன்படி மேலும் அவர் கூறுகையில், பிக் பாஸ் பாக்கிற ரசிகர்கள், எனக்கு ஒரு பத்தாயிரம் மெசேஜ் அனுப்பி இருப்பாங்க. வழமையாவே எனக்கு மெசேஜ்க்கள் வந்திட்டு தான் இருக்கும். ஆனா இந்த சீசன்ல ரொம்ப ஜாஸ்தி. ஏன்னா இதுல ஜோவிகாவும் கலந்து கொண்டது தான்.

அதுல பல ரசிகர்கள் என்ன கேக்குறாங்கன்னா, அக்கா PR பண்ணுறோம், மார்க்கெட்டிங் பண்ணுறோம் என்று பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட் சேஞ்ச் பண்றாங்க அத பத்தி கட்டாயம் பேசுங்க என என்னட்ட கேட்டாங்க..

அவங்க சொன்னது போலவே பிக் பாஸ் ஓட்டிங் எல்லாமே இப்ப உண்மை இல்லை. மக்கள் விருப்பத்துக்கு மாறாக தான் எல்லாம் காசுக்காக நடக்குது. அத்தோட  டோமெக்ஸ் கேம்ல கூடவா இவ்வளவு பெரிய டிஃபரென்ஸ்ல ஒருத்தங்க லீடிங்ல இருப்பாங்க என சிரிப்பா இருக்கு.

ஆனா, அது தான் PR கம்பெனி செய்ற வேலை, இதுக்காக பயங்கரமா வேலை செய்றாங்க. விஜய் டிவி இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்க வேணும். இத ஆராய்ந்து மக்களின் உண்மையான விருப்ப தெரிவை கொண்டு சேர்க்கணும்.


இந்த சீசன்ல வெளியாகிற அவுட்டிங் லிஸ்ட் எல்லாமே நாம பாத்துட்டு தான் இருக்கோம். ஆனா ஒன்றுமே genuine கிடையாது.  PR இருக்கு தானே,  காசு கொடுத்து அவங்க போட்டுட்டு போயிருவாங்க. ரசிகர்களோட உண்மையான அன்பு ஓட்டிங்ல போய் சேராது. 

இப்ப இந்த சோசியல் மீடியாவில் நடக்கிற PR மார்க்கெட்டிங் தான், இந்த சீசன்ல வின்னர் யாரு  ரன்னர் யாரு என எல்லாத்தையும் ஓட்டிங்க காசுக்காக மாத்தி தீர்மானிக்குது. வர வர இந்த ஷோவும் அப்படி ஆகிட்டு. 

இந்த ஷோ முடிய மட்டும் பிடிச்சவங்கள பாத்து  ரசிக்கலாம். ஷோ முடிஞ்சதும் பிடிக்காதவங்க வின் பண்ணினா கிழிக்கலாம் அவ்வளவு தான்.


அப்புறம், அர்ச்சனா நல்லா  செய்து இருந்தாங்க. ஈஸ்வரி கேரக்டர் உண்மையாவே அவங்களுக்கு ஏத்த போல தான் இருந்துச்சு. அர்ச்சனா வந்த முதல் மாயா கூட இருந்த எல்லாரையும் பிரிக்க தான் பாக்கிறாங்க. அப்படி என்ன கோவம் என்று தெரியல. வெளில இருந்து வெறும் கமெண்ட்ஸ் மட்டும் பாத்துட்டு இப்படி பண்ணுறாங்க போல.. இப்ப அர்ச்சனாவுக்கு தான் வெளில பேட் கமெண்ட்ஸ் வருது.

ஆனா மாயா.. நான் நினைக்கவே இல்ல. பட்டைய கிளப்பிட்டாங்க. அவங்க பண்ணினது தான் உண்மையாவே என்டர்டைமென்ட். யாரும் அப்படி பண்ண மாட்டாங்க. நகைச்சுவையோடு நடனம் செய்யக்கூடிய ஆட்கள் இப்ப சினிமால குறைவு. கடந்த 2 வாரமா மாயா, பூர்ணிமாக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைச்சி இருக்கு.

எனவே, இந்த சீசன்ல யார் வின் பண்ணுவாங்க என்று சொல்ல தெரியல. ஆனா..  இந்த முறை மக்களோட ஓட்டிங் வெற்றி பெற போகுதா? இல்ல PR ஓட்டிங் வெற்றி பெற போகுதா? என பொறுத்து இருந்து தான் பார்க்கணும்' என சொல்லியுள்ளார் வனிதா.


Advertisement

Advertisement