• Jan 19 2025

அந்த மாதிரி ஒரு ஆம்பள உனக்கு வேணாம்மா.. தூக்கிப் போடு அவன..! அதிர்ச்சியில் உறைந்துநின்ற ஜெனி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய நாள் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

ஜெனியின் அப்பாவுக்காக செழியன்  காத்துக் கொண்டிருக்க, மாலினி அங்கு வருகிறார். அதுக்கு ஏன் இங்க வந்த என்று கேக்க, உன்ன பாக்க தான் வந்தன் என சொல்ல, மாலினி எல்லாத்துக்கும் சாரி என சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் வர, செழியன் அதிர்ச்சி அடைகிறார். மாலினி அவரிடம், செழியனுக்கு ஜெனியும் வேணும் நானும் வேணும் என இல்லாதவற்றை சொல்லுகிறார். கோவப்பட்ட ஜெனியின் அப்பா செழியன் பேச்சை கேட்காமல் செல்கிறார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த ஜெனியின் அப்பா, செழியன் உனக்கு வேணாம்மா, என நடந்தவற்றை சொல்லுகிறார்.

அதன்படி, ஜெனியை செழியனிடம் இருந்து பிரிக்கும் முடிவில் அவர் ஆணித்தரமாக உள்ளார் என்பது விளங்குகின்றது. 

எனவே, ஜெனி செழியனை விவாகரத்து பண்ணுவாரா? இல்லை உண்மை வெளிச்சத்துக்கு வருமா என பொறுத்து இருந்து பார்ப்போம்..


Advertisement

Advertisement