• May 18 2024

42 வருடமாய் ரஜினி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க காரணம் இது தான்..யாராலயும் அசைச்சுக்க முடியாத ஹீரோ..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

விடாமுயற்சி கூடிய உறுதியான தன்னம்பிக்கை, கறுப்பாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். பணம், புகழ், அந்தஸ்து, கௌரவம், என்று எதையும் தலையில் ஏற்றி கொள்வதில்லை ரஜினி. சினிமாவில் உள்ள சக கலைஞர்களுக்கும் மதிப்பு தருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டுமே.

ரஜினிகாந்த்துக்குப் பிறகு எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும், இன்றும் மக்களின் மனதில் மன்னன் தான். தற்போது தலைமுறையினர் கூட ரஜினிகாந்தை ரசிக்கிறார்கள். 

தமிழகத்தில் ஸ்ரீராகவேந்திரர் மற்றும் மகா அவதார் பாபாஜி மகான்களை அறிமுகப்படுத்தியவர் ரஜினிகாந்த்  தான். நெற்றியில் திருநீறு அணிந்த முதல் நடிகர் ரஜினிகாந்த் தான்.திரையில் மட்டும் அல்ல, குணத்திலும் சூப்பர் ஸ்டார் தான்.

இந்த ஒரு விஷயம் இந்தியாவில் ஏன் உலக அரங்கிலேயே ரஜினிகாந்துக்கு மட்டுமே இருப்பதால் அன்றிலிருந்து இன்று வரை வயதாகியும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்து வருகிற. தற்போது இளம் ஹீரோக்கள் மத்தியில் போட்டி போட்டு அவர்களுக்கு நிகராக சம்பளத்தையும் பெற்று வருகிறார் இது யாராலும் செய்ய முடியாத ஒன்று.

இனிமேல் இப்படி ஒரு கதாநாயகன் வருவாரா என்பது தெரியாது அப்படி வந்தாலும் இவர் அளவுக்கு இந்த வயதில் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் கூட புகழ்பெற முடியுமா என்பது சந்தேகம். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ரஜினிகாந்த்

Advertisement

Advertisement