அஜித்குமாரின் தீவிர ரசிகன் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள good bad ugly திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக இயக்குநர் வீடியோ ஒன்றினை வெளியிட்டு விடாமுயற்சியால் சோகமாக இருந்த தல ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
ஜி .வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தினை ரவி சங்கர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா ,பிரபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் , சுனில் ,ஜோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் சூப்பர் ஆக தயாராகி வரும் இந்த படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதில் ஒரு கதாபாத்திரம் ரவுடி அந்த கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் ஏதோ தப்பு செய்து ஜெயிலில் இருக்கின்றார். அங்கு அவருக்கு ஒரு பாடல் தயாராகி வருவதாக சிறிய கதை தற்போது இணையத்தில் பரவியுள்ளது. மற்றும் இந்த படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!