• Jul 27 2024

இது என்னுடைய கனவு ஹிப் பாப் ஆதி! இது மிகவும் பெரிய படமாக இருக்கும் ஓபனாக சொன்ன ஆதி!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பலரும் வேறு துறையில் தங்கள் சினிமா பயணத்தை ஆரம்பித்து பின்பு நடிகராகி மாறுகின்றனர். அவ்வாறே ஜிவி பிரகாஷ் , விஜய் ஆண்டனி வரிசையில் நடிகராக மாறிய ஹிப் பாப் ஆதி தனது அடுத்த திரைப்படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.


யூடியூப்களில் பாடல்களை பாடி பிரபலமாக இருந்து பின்பு விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் ஹிப் பாப் ஆதி ஆவார். இவர் சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனது அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.


அவர் கூறுகையில் "என்னுடைய அடுத்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும், அது என்னோட கனவு project-னு சொல்லலாம்; அப்படத்திற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்” மதுரையில் "PT SIR" படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த பின்பு நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement