• May 18 2024

"தலைவர் 170" இப்படித்தான் இருக்க போகுது... எதிர்பாராத வெற்றி அளித்த ஜெயிலர்... மகிழ்ச்சியில் நடிகர் ராஜனிகாந்த்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங் செல்லும் போது ஊடகவியாளர்கள் கேட்ட வேள்விக்கு இவ்விதம் பதிலளித்துள்ளார். 


ஜெயிலர் படத்தின் அமோகமான வெற்றியின் பின் அடுத்ததாக தலைவர் 170 என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜனி காந்த் அவர்கள் நடிக்கின்றார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும் போது  ஊடகவியலாளர்கள் ஜெயிலர் படம் உங்கள் ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடியுள்ளனர். நீங்கள் எதிர் பார்த்த அளவு வெற்றி கிடைத்ததா என்று கேட்ட அதற்கு ரஜனி அவர்கள் நாங்கள் எதிர் பார்க்காத அளவு வெற்றி கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். 


மேலும் உங்கள் அடுத்த படத்தின் பெயர் "தலைவர் 170 " தானா? அல்லது வேறு பெயர் யோசனை செய்துள்ளீர்களா என்று ஊடகவியலாளர் கேட்க அதற்கு நடிகர் ரஜனிகாந்த் இன்னும் இல்லை இனி தான் யோசனை செய்வோம், இந்த தலைவர் 170 திரைப்படம் ஒரு நல்ல கருத்துள்ள, பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என கூறிஉள்ளார்.


  

Advertisement

Advertisement