• Nov 22 2024

குடிக்க தண்ணீர் கூட இல்லை, மாடியில ஏதாவது மூலையில் தான் கிடைக்குது- வெள்ளத்தில் அவதிப்படும் அசோக் செல்வனின் மனைவி

stella / 11 months ago

Advertisement

Listen News!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலில் பாதிப்பால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

மேலும் விடிய விடிய பெய்த மழையால் சென்னை நகரமே வெல்ல காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கீழ் தளத்தில் வசிக்கும் மக்கள் வீட்டின் உள்ளே மழை நீர் புகுந்ததால் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த வெள்ளத்தினால் மக்கள் மட்டுமன்றி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்கும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த மிக்ஜாம் புயலில் மாட்டிக் கொண்டு தவித்த நிலையில், அவரையும் நடிகர் விஷ்ணு விஷாலையும் மீட்புக் குழுவினர் படகு மூலம் மீட்டுக் கொண்டு வந்தனர்.

 நடிகர் அஜித் இந்த விவரம் தெரிந்து அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு தங்க இடம் கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உ ள்ளன.இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வனின் மனைவியான கீர்த்தி பாண்டியன் மயிலாப்பூரில் வசித்து வரும் நிலையில், அவரது அப்பார்ட்மென்ட் இருக்கும் விவேகானந்தா கல்லூரி இருக்கும் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் கடந்த 48 மணி நேரமாக கரன்ட் இல்லை என்றும் தண்ணீர் கிரவுண்ட் லெவல் வரை தேங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஒருத்தர் கூட காப்பாற்ற வரவில்லை எனக் கூறியுள்ளார்.


அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் ரொம்பவே கஷ்டப்படுகின்றனர். தண்ணீர் கூட கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர். நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. மாடியில் ஏதாவது மூலையில் கிடைக்கும் கொஞ்சம் சிக்னலை வைத்துத் தான் டுவிட் போடுகிறேன். சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் தயவு செய்து இந்த இடத்தின் பிரச்சனை சரி செய்ய வேண்டும் என கீர்த்தி பாண்டியன் டுவிட் போட்டுள்ளார்.


Advertisement

Advertisement