• May 13 2024

த்ரிஷாவைப் பற்றி வந்த கிசுகிசுக்கள்... அடேங்கப்பா இத்தனை பேரா.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் அதில் உள்ள பிரபலங்கள் பலரும் கிசுகிசுக்களில் சிக்குவது சகஜமான ஒன்று. அந்தவகையில்  40 வயதை நெருங்கிவிட்ட த்ஷா இன்னும் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. ஆனாலும் இன்றுவரை இவர் குறித்த அரசல் புரசல் செய்திகள் ஏகபோகமாக பரவி வந்த வண்ணம் தான் இருக்கின்றன.


இதில் இதுவரை காலமும் த்ரிஷா சிக்கிய காதல் கிசுகிசுக்கள் தொடர்பாக பார்ப்போம். அதாவது த்ரிஷாவின் முந்தைய காதல் வாழ்க்கை குறித்து பார்க்கலாம். 


அந்தவகையில் முன்னதாக கில்லி  படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போது நடிகர் விஜய்யுடன் இணைத்து த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் பின்னர் இந்த விவகாரம் அப்படியே முடங்கி போனது.

இதனைத் தொடர்ந்து ராணா டக்குபதியுடன்  இவருக்கு காதல் மலர்ந்ததாக பேச்சுக்கள் எழுந்தன. பல இடங்களிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக திரியும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. ராணா டக்குபதி உடன் இணைந்து இருவரின் உறவும் மிகவும் பிரபலமடைந்தது. அவர்களின் விவகாரம் நீண்ட காலம் தொடர்ந்து வந்தது. 


அதுமட்டுமல்லாது இருவரும் முத்தமிட்ட அந்தரங்க புகைப்படங்கள் கூட சமூக ஊடகங்களில் கசிந்தன. அவர்கள் இடையேயான உறவு மேலும் வேகமாக வலுப்பெற்றது. இந்த புகைப்படங்கள் வெளியாகி தென்னிந்திய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அந்த விவகாரமும் அப்படியே காணாமல் போனது.

அத்தோடு த்ரிஷா கிருஷ்ணன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.


நிச்சயதார்த்தம் முடிந்த ஐந்து மாதங்கள் கடந்த பின்னர்  திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதாவது இருவரும் பழகுவது வருணுக்கு பிடிக்காததால் தான் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார் எனக் கூறப்பட்டது.

இவர்களைத் தொடர்ந்து சிம்புவுடன் த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு த்ரிஷாவும் சிம்புவும் ஒருவரை ஒருவர் டேட்டிங் செய்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள்வெளி வந்தன.


ஆனால் அப்படி எதுவும் கிடையாது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என அவர்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்டனர். எது எவ்வாறாயினும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசி இருந்த நடிகை த்ரிஷா, தன்னை முழுமையாக புரிந்து கொண்ட ஒருவரையே தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் தான் கன்னியாகவே இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறாக அதிகளவான நடிகர்களோடு இணைத்துக் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார் த்ரிஷா.

Advertisement

Advertisement

Advertisement