• Apr 28 2024

ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்...ரசிகர்களுக்கு காத்திருக்கும் புதிய ட்விஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்ப்படும் சீரியலில் ராதிகா, எஸ்ஏசி உடன் ஜீ தமிழ் கதாநாயகி 2 பேர் இணைந்து உள்ளனர். அதுமட்டுமல்ல அந்த சீரியலின் டைட்டிலும் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே டிஆர்பி-யில் கடும் போட்டி நிலவும். இதனால் இவர்கள் ரசிகர்கள், விரும்பும் கதைக்களத்தில் புத்தம் புது சீரியலை அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர்.

அத்தோடு  இப்போது விஜய் டிவி மற்ற சேனல்களுக்கு எல்லாம் தண்ணி காட்டும் அளவுக்கு டாப் பிரபலங்களை ஒரே சீரியலில் இணைத்து மாஸ் காட்டியுள்ளது. பிரபல இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர், ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து புதிய சீரியலில் நடிக்கின்றனர் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

ஆனால் இந்த சீரியலில் இன்னும் 2 கதாநாயகிகள் இணைந்திருப்பது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.அத்தோடு  விஜய் டிவி, ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி உள்ளது. சமீபத்தில் ஜீ தமிழில் நிறைவடைந்த பூவே பூச்சூடவா என்று சீரியலின் கதாநாயகி ரேஷ்மா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலின் ஹீரோயின் அஸ்வினி இருவரும் இணைந்து விஜய் டிவியின் புத்தம் புது சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

இந்த சீரியலுக்கு ‘கிழக்கு வாசல்’ என்று டைட்டில் வைத்திருக்கின்றனர். அத்தோடு நிச்சயம் இந்த சீரியலை விஜய் டிவி பிரைம் டைமில் ஒளிபரப்பாக்கும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. ஏனென்றால் ராதிகா, எஸ்ஏசி, ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்திருக்கும், இந்த சீரியல் நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.

அத்துடன் இந்த சீரியலின் கதை ஏற்கனவே படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விசுவின் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தின் கதை அம்சத்தை வைத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆகையால் விறுவிறுப்பும் சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லாத கிழக்கு வாசல் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள் என சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல சன் டிவியின் சித்தி 2 சீரியலுக்கு பின்னர் முதல் முதலாக விஜய் டிவிக்கு வருகை தந்திருக்கும் ராதிகாவின் நடிப்பையும், சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் எஸ்ஏசி-யின் நடிப்பையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அத்தோடு  விரைவில் கிழக்கு வாசல் சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிடப் போகிறது.


Advertisement

Advertisement

Advertisement