• Sep 09 2025

முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடிக்கும் மிடில் கிளாஸ்...!போஸ்டரை வெளியிட்ட படக்குழு...!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் "ராட்சசன்", "ஓ மை கடவுளே", "மரகத நாணயம்", "பேச்சுலர்" போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தற்போது தனது புதிய படமான "மிடில் கிளாஸ்"-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.


இப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். கதாநாயகர்களாக முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி அகத்தியன் நடித்துள்ளனர். அவர்களுடன் ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

"மிடில் கிளாஸ்" படத்தின் படப்பிடிப்பு 2022-ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்தப் படம் KJR Studios மற்றும் கௌஸ்துப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் கூட்டாண்மையில் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலைப்படி, படம் இந்த ஆண்டிற்குள் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், முனீஷ்காந்த் இந்த ஆண்டு மட்டும் "பெருசு", "கேங்கர்ஸ்", "படைத் தலைவன்", "ஜென்ம நட்சத்திரம்", "சரண்டர்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், விஜயலட்சுமி அகத்தியன் கடந்த ஆண்டு "இறைவன்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

"மிடில் கிளாஸ்" ஒரு சமூக பின்னணியில் எளிய மக்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement