கடந்த காலங்களில் மாவீரன், நான் ஈ , பாகுபலி போன்ற படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிய ராஜமௌலி தற்போது இவர் தனது இயக்கத்தில் RRR திரைப்படத்துடன் சினிமா உலகில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இதில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் ஆஸ்கர் விருதையும் பெற்றது இது ராஜமௌலியின் படைப்பின் மீதான சர்வதேச பாராட்டை மேலும் அதிகரித்தது.
RRR படத்திற்கு பிறகு ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஒரு புதிய படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படம் காசியின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படப்பிடிப்பின் முதற்கட்ட வேலைகள் முடிந்துள்ள நிலையில் ராஜமௌலி இன்னொரு முக்கியமான படத்திற்கு தயாராக இருக்கிறார்.
அதாவது மகாபாரதம் என்ற இம்சைத் தரும் பிரம்மாண்ட படத்தினை அவர் இயக்கவிருக்கின்றார். இது அவரது கனவு படமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மகாபாரதம் படத்தை தனது இயக்கத்தில் முடித்துவிட்டு இவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.
Listen News!