• Jul 09 2025

"டூரிஸ்ட் பேமிலி " படத்திற்கு கிடைத்த வெற்றி..! தெலுங்கு நடிகர் கூட்டணி சேர விருப்பம்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் "டூரிஸ்ட் பேமிலி " இந்த படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷாந் இயக்கியுள்ளதுடன் சசிகுமார் ,சிம்ரன் ,யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


இன்றுவரை படம் உலகளவில் 87.8 கோடி வசூலித்துள்ளது. இதைவிட இந்த மாதம் 2 ஆம் தேதி ott தளத்தில் வெளியாகி இருந்தாலும் இன்றுவரை 87 தியேட்டர்களில் இந்த படம் வெற்றி நடை போட்டு வருவதாக தெரியவந்துள்ளது.


மேலும் இந்த படத்தின் இயக்குநரை தமிழ் நடிகர்கள் அழைத்து பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் தற்போது தெலுங்கு பட நடிகர் நாணி இவரை அழைத்து பாராட்டி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதைவிட சிறந்த கதை இருந்தால் கூட்டணி சேர ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement