• Jan 19 2025

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விஜயாவுக்கு 'ஆசிட்' அடிப்பதாக மீனா ஃபேன்ஸ் நேரில் மிரட்டல்? பரபரப்பு சம்பவம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை அனிலா ஸ்ரீகுமார். இவர், சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி அவர் கூறுகையில்,

நான் 33 வருட காலமாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். ஆனால் எனக்கு தமிழில் நடிப்பது தான் அதிக  கம்பர்டபிளாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுக்கும் வரவேற்பை நான் உண்மையிலேயே பார்த்து சந்தோஷப்படுகிறேன். இதுவரைக்கும் எந்த கேரக்டரிலும்  கிடைக்காத பிரபலம் சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா கேரக்டரில்  கிடைத்தது.

இந்த சீரியல் மூலம் பலர் என்னை எளிமையாக அடையாளம்  கண்டுபிடிக்கிறார்கள். நான் வெளியே போகும் போதெல்லாம் என்னோடு வந்து போட்டோ எடுக்கிறார்கள். ஆனால் இன்ஸ்டாவில் போட்டோ போட்டால் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட் போடுகிறார்கள்.


மேலும், ஏன் நீங்க எப்போதும் இப்படியே இருக்கீங்க? மீனாவ  போட்டு பாடா படுத்துறீங்க? என்று மட்டுமின்றி, உங்கள நேர்ல பார்த்தா 'ஆசிட் அடித்து விடுவேன்' என்றும் மிரட்டுகிறார்கள். இது ஒரு விதத்தில் சிரிப்பாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

என்னுடைய கணவருக்கு நடிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசை. அவர் புரொடக்ஷனில் பிஸியாக இருக்கிறார். அதுபோல என்னுடைய மகள் இப்போது படித்துக்கொண்டு உள்ளார். ஆனால் அவனுக்கு நடிப்பு கொஞ்சம் கூட விருப்பமில்லை. என் மகனுக்கும் நடிப்பதற்கு ரொம்பவே விருப்பம். நானும் அவனும் மலையாளத்தில் ஒரு ஷார்ட் பிலிம்மில் நடித்து இருக்கின்றோம். 


அந்த ஷார்ட் பிலிம்மில் என்னுடைய மகன் இறந்துபோது போல் காட்சி இருக்கும். அவன் அந்த சீனுக்கு தூங்கியே விட்டார். நானும் என் மகன் இறந்த துக்கத்தில் அழுவது போன்று அழுது முடித்து விட்டேன். அவனும் அந்த சூட்டிங்கில் தூங்கி எழுந்த பிறகு சூட்டிங் காட்சிகள் முடிந்தது. அதில் நான் அழுததை பார்க்கும்போது என் மகன் அழுது விட்டான். நான் அழுததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு நான் நேரில் சென்று தான் அவனை  சமாதானப்படுத்தி இருந்தேன். அவனுக்கு தமிழில் நடிக்க  வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. சீக்கிரத்தில் அவனுடைய ஆசையும் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.


மேலும், சிறகடிக்க ஆசை சீரியலில் எல்லாரும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கின்றோம். சில சீரியலில் நடிக்கிறவங்களுக்குள் பிரச்சனை என்றெல்லாம் செய்தி வரும். ஆனால் எங்க சீரியலில் அப்படி இதுவரைக்கும் நடந்ததே இல்லை. யார் கண்ணும் பட்டுவிடக்கூடாது நாங்கள் இப்படியே இருக்க வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement