• Apr 28 2024

படுமோசமாக வசூலில் பின் தள்ளப்பட்ட இறைவன் திரைப்படம்- மூன்று நாட்களில் இத்தனை கோடி தான் வசூலா?

stella / 6 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம் தான் இறைவன். 

இப்படத்தினை  தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஸ்சன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தனர்.அத்தோடு இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.இதனால் இறைவன் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைய துவங்கியுள்ளது.

இந்நிலையில், இறைவன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 9 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.ஜெயம் ரவி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்த நடித்த படத்திற்கே இப்படியொரு நிலைமையா என பலரும் கேட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement