• Jan 19 2025

விஜய் யாரென்றே தெரியாமல் அங்குமிங்கும் ஓடிய பாட்டி - சிரித்துக் கொண்டே பதில் கூறிய தளபதி - வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு படகுகள் மூலம் சென்று வழங்கினார்கள்.

 இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பத்திற்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


நலத்திட்டம் வழங்கும் விழா, திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் மாதா மஹாலில் நடைபெற்றது. அப்போது, உதவி பெற வந்த ஒரு மூதாட்டி யாருப்பா விஜய்...யாருப்பா விஜய் என கேட்டுக்கொண்டே மேடையின் மீது அங்கும் இங்கும் ஓடினார்.

அப்போது, அவரை அன்போடு அழைத்த விஜய், நான் தான் விஜய் என்று சொன்னார். உடனே அந்த மூதாட்டி விஜய்யின் கன்னத்தை பிடித்து கிள்ளி, கைகளை பிடித்தார்.இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement