• Mar 06 2025

"டிராகன்" பட வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு..!

Mathumitha / 12 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய "டிராகன்" திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாபெரும் வெற்றியுடன் உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த இந்த திரைப்படம் படக்குழுவினரால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. 

"டிராகன்" திரைப்படம் அதன் கதை கதாபாத்திரங்களின் பரபரப்பான நடிப்பு மற்றும் இசை வழியில் சாதனை படைத்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் சிறந்த நடிப்பும் இயக்குநரின் கணிசமான முயற்சியும் படத்தை வெற்றியடைய வழிவகுத்துள்ளது.இதற்காக படக்குழு சார்பில் கேக் வெட்டி வசூல் சாதனையை கொண்டாடியுள்ளனர்.


மேலும் இப் படம் தற்போது வரை எதிர்பாராத அளவில் வெற்றி நடைபோட்டு வருகின்றது.மற்றும் இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கு தீர்மானித்து இருப்பதாகவும் இயக்குநர் நடிகர் இருவரும் சிறந்த நன்பர்கள் என்பதுடன் இப் படம் இருவருக்கும் இரண்டாவது வெற்றி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement