• Mar 06 2025

விஜய் டீவி நடுவர் 2வது திருமணம் செய்தாரா...? உண்மையை உடைத்த ஸ்ருதி!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

பிரபல சமையல் கலைஞராகவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நடுவராகவும் ரசிகர்களிடையே பிரபலமானவரே மாதம்பட்டி ரங்கராஜ். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவிவந்துள்ளன. இதுகுறித்து, அவருடைய மனைவி தற்பொழுது வெளியிட்ட தகவல் அனைவருக்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி தீயாக பரவியது. அவருடைய முதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததா? அல்லது இரண்டாவது திருமணம் உண்மையா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தன.


குறிப்பாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் என்பவருடன் அவர் திருமணம் செய்து கொண்டதாக சில இணையதளங்கள் தகவல்களை வெளியிட்டன. இதனால், ரசிகர்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரது மனைவி கூறியதாவது , "இது முற்றிலும் தவறான தகவல். நான் தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி. இரண்டாவது திருமணம் செய்ததாக வெளியான செய்தி உண்மை அல்ல. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்தார். அத்துடன், "எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. சிலர் கற்பனை செய்து பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். அது நாங்கள் சந்திக்கும் தனிப்பட்ட விஷயம்" என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement