• May 18 2024

அந்தகன் திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் ஏராளமான இளம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய காதல் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

மேலும் உடல் எடை அதிகரித்ததால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரி என் ரி கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் ‘அந்தகன்’ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக் யோகிபாபு வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுள்ளார் . இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் ஜூலை மாதம் முதலாம் திகதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Advertisement

Advertisement