• Mar 29 2023

ரசிகர்களால் கடுப்பான ஓவியா... எப்ப பாத்தாலும் இதே கேள்வி தானா..? அப்படி என்ன கேட்டிருப்பாங்க..?

ammu / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை ஓவியா தமிழில் களவானி உட்பட சில வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்திருகிறார். இருந்தும் இவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் 1ல் களம் இறங்கிய இவர் பெரும் இடத்தை பிடித்தார். 


இவருக்கு ஆர்மி எல்லாம் தொடங்கப்பட்டது. அந்த அளவுக்கு பாப்புலராக இருந்தார். அந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொள்ளாததால், பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அதில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 


அந்த வகையில் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவரிடம் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று கேட்டுள்ளனர். 


அவர் இந்த கேள்வியை தவிர்த்து வந்தாலும், ரசிகர்கள் விடாமல் அவரிடம் இந்த கேள்வியை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோதும் ஓவியாவிடம் அவரது திருமணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


இந்த கேள்விக்கு ஓவியா கடுப்பாகி பதில் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது “எப்ப பாத்தாலும் இதே கேள்வி தான் கேட்பீங்களா? எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா சுத்தமாக இல்லை. இந்த மாதிரி கேள்வியை கேட்டு ஏன் உயிர வாங்குறீங்க" என சற்று கோபத்துடனே பதிலளித்துள்ளார் ஓவியா. அவரின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் சற்று அப்செட் ஆகி உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement