• Jun 04 2023

மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாளை மறக்காமல் வாழ்த்துத் தெரிவித்த பிரபல இயக்குநர்- அது யார் தெரியுமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சீரியல்களில் நாயகியாக நடித்து வந்தவர் தான்  நடிகை சித்ரா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பின் மூலம் அம்மா-அப்பாவிற்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்களை அழகாக பார்த்து வந்தவர்.

தனது ரசிகர்களையும் உறவினர் போலவே நடத்தி வந்தார், பிஸியாக இருக்கும் நேரத்திலும் ரசிகர்களை சந்திப்பதை மட்டும் எப்போதும் தவறியது இல்லை.சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிட்டு வரும் சித்ரா ரசிகர்களுடனும் லைவ்வில் வந்து கலந்துரையாடுவார். மக்களுக்கும் நெருக்கமான ஒரு நாயகியாக இருந்த சித்ரா இப்போது நம்முடன் இல்லை என்பதே பெரிய வருத்தம் தான்.


டிசம்பர் மாதம் 2020ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார், இதுவரை அவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவரது ரசிகர்கள் சித்ரா பெயரில் நிறைய பக்கங்கள் வைத்து பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர். இன்று மே 2, அவரது பிறந்தநாள், ரசிகர்கள் காலை முதல் வாழ்த்து பதிவு செய்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்ற சித்ராவிற்கு அந்த தொடர் இயக்குநர் சிவ சேகர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா என பதிவு செய்துள்ளார். அவரின் பதிவிற்கு  ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement