• Oct 08 2024

நடுரோட்டில் நடிகர் மனைவியிடம் அடி வாங்கிய நடிகை...விஜய்யுடன் சந்திப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல ஒடியா நடிகை ப்ரக்ருதி மிஷ்ரா. தேசிய விருது பெற்ற நடிகையான ப்ரக்ருதி மிஷ்ரா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சக நடிகரான பாபுஷான் மொஹண்டியுடன் புவனேஷ்வரில் காரில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் இதனை அறிந்த பாபுஷானின் மனைவி மற்றொரு காரில், பாபுஷான் மற்றும் ப்ரக்ருதி ஆகியோர் சென்ற காரை விரட்டி பிடித்தார்.

இதன்  பின்னர் காரில் இருந்த ப்ரக்ருதியை முடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளிய பாபுஷானின் மனைவி அவரை சரமாரியாக தாக்கினார்.

இவ்வாறுஇருக்கையில் அவரிடம் இருந்து தப்ப முயன்று ஆட்டோவில் ஏறிய போதும் விடாத நடிகர் பாபுஷானின் மனைவி அவரை ஆபாச வார்த்தைகளால் பேசி அடித்து நொறுக்கினார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

இதுதொடர்பாக இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ப்ரக்ருதி, பிரபல நடிகரான விஜய் தேவர கொண்டாவை சந்தித்துள்ளார். 

அந்த புகைப்படத்தை  தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை ப்ரக்ருதி, இது ஒரு பதிவு அல்ல, இது ஒரு வெளிப்பாட்டின் ஜன்னல்.. என்னுடையதும் உங்கள் விருப்பப்படி வேலை செய்தது! உங்கள் உறுதிமொழிகளை சொந்தமாக வைத்திருங்கள்.. ஒரே ஒருவருடன் என விஜய் தேவகொண்டாவின் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.



Advertisement