• Aug 02 2025

"உங்க ஆசீர்வாதம் அவனுக்கு தேவை.." தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மட்டுமன்றி சிறந்த நடன மாஸ்டராக தமிழ் சினிமாவில் வலம் வரும் ராகவா லாரன்ஸ் படம் நடிப்பதை தாண்டி சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றார். சமீபகாலமாக சிறந்த படங்கள் இவருக்கு வாய்க்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்போது தனது வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


குறித்த பதிவில் அவரது தம்பி எல்வின் பிறந்தநாள் இன்று என்பதால் " அனைவருக்கும் வணக்கம் இன்று எனது தம்பி பிறந்தநாள் அவனுக்கும் எனக்கும் உங்க எல்லோருடையதும் ஆசீர்வாதமும் support தேவை" என தம்பியின் புகைப்படம் ஒன்றுடன் வாழ்த்து கூறியுள்ளார்.


இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர்களது சகோதரத்துவம் குறித்தும் தங்களது கமெண்ட்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement