• May 12 2024

28வயது மாடலுடன்... காதலில் விழுந்த 48வயது டைட்டானிக் நடிகர்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

அமெரிக்க நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ போன்று நடிப்பு உலகில் வேறு யாரும் இல்லை. அதாவது 'தி ரெவனன்ட்' திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்றதிலிருந்து தி ரெவனன்டில் ஹக் கிளாஸாக இதயத்தை உடைக்கும் திருப்பம் வரை, திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த மற்றும் அற்புதமான பாத்திரங்களில் அவர் நடித்து புகழின் உச்சத்தை தொட்டிருக்கின்றார்.


மேலும் இவர் 'டைட்டானிக்' படத்தில் நடித்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவருக்கு 48 வயது ஆகிறது. இந்நிலையில் நடிகர் டிகாப்ரியோவும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய மாடல் அழகியான 28 வயது நீலம் கில்லும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று தீவிரமாக பரவி வருகின்றது.


அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள சில்டர்ன் பயர் ஹவுஸ் என்ற இடத்தில் ஜோடியாக இருந்து உணவு சாப்பிட்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் சந்தேகத்தை மென்மேலும் கிளப்பி இருந்தன.

அந்தப் புகைப்படத்தில் டிகாப்ரியோவின் தாயார் இர்மெலின் இண்டன்பிர்கென் மற்றும் நண்பர்கள் சிலரும் இருந்துள்ளனர். அத்தோடு சமீபத்தில் இடம்பெற்ற கேன்ஸ் படவிழாவுக்கு தனது கில்லர்ஸ் ஆப் தி பிளவர்ஸ் படத்தை திரையிட டிகாப்ரியோ சென்று இருந்தார். அங்கும் டிகாப்ரியோவும், மாடல் அழகி நீலம் கில்லும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருவரும் காதலிப்பதை உறுதி செய்தன.


இவ்வாறாக இவர்கள் இருவரது காதல் விவகாரம் ஆனது தற்போது ஹாலிவுட்டில் பேசுபொருளாக மாறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement