• Mar 31 2025

புதுவை சிறுமிக்கு நேர்ந்த பரிதாப முடிவு.. அதிகபட்ச தண்டனை வாங்கி தாருங்கள்: தவெக விஜய் அறிக்கை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆறு பேர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ள நிலையில் தற்போது குற்றவாளிகள் பிடிபட்டு விட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் இது குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.



Advertisement

Advertisement