• Jun 04 2023

பின்னாடி ஒருத்தன் என்ன பண்றானு கூடத் தெரியாம ரொமான்ஸ் பண்ண சூர்யா - ஜோதிகா..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எடிட் செய்து வெளியாகும் படங்களிலேயே பேக்கிரவுண்டில் சில தவறுகள் நடந்திருக்கும் ஆனால், அது தெரியாமல் அப்படியே ரிலீஸ் செய்து விடுவார்கள்.

அப்படி ரிலீஸ் ஆன சூர்யா - ஜோதிகா நடித்த ஒரு ரொமான்டிக் பாடல் காட்சியில் நடந்த தவறை வேறலெவல் எடிட் ஸ்டோரியாகவே நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு நக்கலடித்துள்ளார்.

தற்போது  சமூகவலைத்தளத்தில்  அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், பல ரசிகர்கள் அது குறித்த ட்ரோல்களையும் பதிவிட்டு வருகின்றனர். எனினும் சமீபத்தில் வெளியான சிம்புவின் பத்து தல படத்தை இயக்கிய கிருஷ்ணா முதன் முறையாக இயக்குநராக அறிமுகம் ஆனதே சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் தான்.

எனினும் அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதிலும், வாலியின் வரிகளில் இடம்பெற்ற அந்த நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடல் இன்னமும் ஏகப்பட்ட இளைஞர்களை முணுமுணுக்க வைத்து வருகிறது. அந்த பாடலில் தான் இப்படியொரு கன்றாவியான காட்சி இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் நியூயார்க் நகரம் பாடல் படமாக்கப்பட்ட நிலையில், சுற்றி என்ன நடக்கிறது என்கிற கவனம் எல்லாம் இல்லாமல் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் ரொமான்ஸ் செய்து அந்த பாடலில் நடித்துள்ளனர்.

அத்தோடு கேமராமேன், மானிடர் பார்த்த இயக்குநர், எடிட் பண்ண எடிட்டர் என யாருமே சூர்யா - ஜோதிகா பின்னாடி நடந்த அந்த விஷயத்தை கண்டு பிடித்தார்களா? அல்லது ஃபாரீன் ஷூட் முடித்து வந்தாச்சூ, அதை அப்படியே கண்டுக்காம விட்ருவோம் என விட்டுட்டாங்களா என தெரியவில்லை.

வெளிநாட்டுக்காரர் ஒருவர் பப்ளிக்காக ஒரு மரத்தின் பின்னாடி நின்றுக் கொண்டு தனது உடையை அவசர அவசரமாக மாற்றும் காட்சிகள் தான் நியூயார்க் நகரம் பாடலில் சூர்யாவும் ஜோதிகாவும் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்த போது பின்னாடி நடந்திருக்கிறது.

எனினும் தற்போது அதனையும் உற்றுக் கவனித்துக் கண்டுபிடித்த நெட்டிசன் ஒருவர் அதற்கு ஒரு திரைக்கதையையே உருவாக்கி அர்ஜென்ட்டில் ஒன் பாத்ரூம் போய் விட்டு தனது ஆடையை அந்த நபர் மாற்றி உள்ளார். யாருமே பார்க்கல என நினைத்த அவர் படமாகவே அந்த சீன் வந்ததை பார்த்து அழுது கொண்டிருக்கிறார் என அனிமேஷன் வீடியோ ஒன்றையே பதிவிட்டு ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement