• Sep 19 2025

"மோனிகா" பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை பிரபலம்.! இது சூப்பரா இருக்கே! வைரலான வீடியோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "மோனிகா..." சமீபத்தில் யூடியூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, டிக்டாக், ரீல்ஸ், யூடியூப் shorts பயனர்கள் அனைவரும் அந்த பாடலைத் தங்களது வீடியோக்களில் பயன்படுத்தி வருகின்றனர்.


அந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே கலக்கலாக நடனமாடியுள்ளார். தற்போது, அந்தப் பாடலை மையமாகக் கொண்டு இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த சிங்களப் பெண் சாசினி சதுரங்கி, ரீ-கிரியேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளார்.


சாசினி சதுரங்கி என்பவர், கொழும்பைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண். எனினும், இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் பாடல்கள், நடனம், வீடியோ பேச்சுகள், போட்டோஷூட் ஆகியவற்றின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறார்.


சமீபத்தில், கூலி படத்தின் மோனிகா பாடலுக்கு இவர் நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement