• May 18 2024

இவரின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 உலகின் பிரபல மாடல் கைலி ஜென்னர் தன்னுடைய ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு, கோடி கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர போஸ்ட் போடுவதற்கு லச்சக்கணக்கில் வாங்கும் பிரபலங்களில் உள்ளூரிலேயே இருக்கிறார்கள். எனினும் அதே போன்று, சர்வதேச பிரபலங்கள் ஒரு போஸ்டிற்கு பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அந்த வரிசையில், கைலி ஜென்னர் முதல் இடத்தில இருக்கிறார். 

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், தொழில் அதிபருமான கைலி ஜென்னர் சமூக ஊடகங்களில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர்.மேலும்  இவர் அடிப்படையில் ஒரு மாடல் ஆவார். இவருக்கு என்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.



சோசியல் மீடியாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம் வயதில் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். இவரை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 370 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்கிறார்கள்.

மேலும் இவர் அடிக்கடி சர்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில் தற்போது, இவர் தன்னுடைய ஒரு பதிவுக்கு இவருக்கு கிடைக்கும் தொகை சுமார் 15 கோடியாகும். 



 இதன் மூலம் 25 வயதிலேயே அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அத்தோடு இவருக்கு அடுத்தபடியாக செலினா கோமஸ், கிம் கர்தாஷியன், அரியான, பியான்சே, இக்ளோயி ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறார்கள்.




Advertisement

Advertisement