• May 17 2024

அழகு தேவதையாய் மிளிரும் சினேகா... அட இவங்களுக்கா 40 வயசு..? இந்த வயசிலும் இப்படி ஒரு லுக்கா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சினேகா. ஏராளம் படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். 



திரையுலக நட்சத்திரங்களான சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி தம்பதிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி என்றால் அது நம்ம சினேகா - பிரசன்னா ஜோடி தான். அதாவது இவர்கள் இருவரும் 2009-ம் ஆண்டு வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ என்ற படத்தில நடித்திருந்தார்கள். அப்போது பிரசன்னாவுக்கும் சினேகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 



அதனைத் தொடர்ந்து பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திரையுலகினர் புடைசூழ இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கையின் பலனாக 2015-ஆம் ஆண்டு இவர்களுக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகா சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவான 'வேலைக்காரன்' என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.



இப்படத்தில் சவாலான வேடத்தில் திறம்பட நடித்து பலரிடமும் பாராட்டுக்களை பெற்ற நடிகை சினேகாவிற்கு இதன்பின்னரும் ஒரு சில பட வாய்ப்புக்கள் கிடைத்தன. எனினும் அந்த சமயத்தில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் மீண்டும் சினிமாவிற்கு ரெஸ்ட் விட்டார்.



அதனைத் தொடர்ந்து இரண்டாவது குழந்தையாக இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்திருக்கின்றார்.



இவ்வாறாக நடிப்பில் பிஸியாக இருந்த சினேகா சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.




அந்த வகையில் தற்போது சல்வார் அழகு தேவதையாய் மிளிரும் நடிகை சினேகா அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement