• Apr 27 2024

சித்தார்த் படத்தை ரிஜக்ட் பண்ணிய சிவகார்த்திகேயன்- ரகசியத்தை வெளியில் கூறிய பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வந்தாலும் வெள்ளித்திரையில் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் இயக்குநர் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. குறிப்பாக டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றன.அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகின்றார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது ஜிகர்தண்டா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.அப்படத்தில் சித்தார்த் நடித்த கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் அணுகப்பட்டதே நடிகர் சிவகார்த்திகேயன் தான் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தை அவர் நிராகரித்ததாக தெரிவித்து இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement