• Apr 20 2026

கமல் பட இயக்குநருடன் கூட்டணி சேரவுள்ள சிவகார்த்திகேயன்..!

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ஆரம்பங்களில் ஒரு சில நல்ல படங்களை கொடுத்திருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் பட வெற்றியின் பின்னர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார். அதில் ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு படம் மற்றையது சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி " எனும் திரைப்படம்.


சமீபகாலமாக சிறந்த இயக்குநர்களை தானே தேடிப்போகும் பழக்கத்தினை சிவகார்த்திகேயன் பேணி வருகின்றாராம் அவ்வாறு தான் "பராசக்தி "பட வாய்ப்பும் இவருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகின்றது. இவர் அமரன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மிகவும் ஆழமாக இடம்பிடித்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது கமலை வைத்து படம் இயக்கவுள்ள அன்பு ,அறிவு எனும் இரட்டையர்களின் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இவர் பிரபலமான இயக்குநர்களுடன் கூட்டணி வைத்து வருவதால் சிவகார்த்திகேயனின் அடுத்த பட வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement