• Jan 19 2025

மனைவிக்கு ஆசை ஆசையாய் கேக் ஊட்டிய ‘சிறகடிக்க ஆசை’ அண்ணாமலை.. க்யூட் வீடியோ..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் கேரக்டர்கள் அனைத்துமே முக்கியத்துவம் தரும் வகையில் கதை நகர்ந்து வருவதால் பார்வையாளர்கள் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பழம்பெரும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ஹீரோ முத்துவின் அப்பாவாக நடித்திருக்கும் நிலையில் அவரது நடிப்புக்காகவே பலர் இந்த சீரியலை நடித்து வருகின்றனர்.

கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற படத்தின் மூலம் இயக்குனரான ஆர் சுந்தர்ராஜன் அதன் பிறகு ரஜினியின் ’ராஜாதி ராஜா’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பதும் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக மாறினார் என்பதும் நூற்றுக்கணக்கான படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அவர் ஒரு பொறுப்புள்ள அப்பாவாக ஒரு குடும்ப தலைவனாக நடித்து வரும் நிலையில் அவரது கேரக்டருக்கு பாசிட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன், ராஜேஸ்வரி என்பவரை கடந்த 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் இருந்ததாகவும் அதில் ஒருவர் விபத்தில் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் இன்று ஆர் சுந்தர்ராஜன் தனது திருமண நாளை தனது மனைவியுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து சுந்தர்ராஜன் - ராஜேஷ்வரி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement