• Apr 28 2024

காதலன் பாப்கன் சாப்பிடும் அழகை ரசித்த படியே போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்- வைரலாகும் வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும் வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன்.இவர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இவருடைய முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்று் கொடுத்தது.

அடுத்தடுத்து விஜய் உடன் புலி, அஜித் ஜோடியாக வேதாளர், தனுஷின் 3, ஆகிய திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.தற்பொழுது தமிழில் படவாய்ப்புக்கள் குறைவடைந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதிலையே ஆர்வம் காட்டி வருகின்றார்.


இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், பால கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருந்தார் ஸ்ருதி. இந்த இரண்டு படங்களுமே கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இப்போதுபிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தை கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. செப்டம்பர் 28-ந் தேதி சலார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.


ஸ்ருதிஹாசன் டூடுல் கலைஞர்  சாந்தனு ஹசாரிகா, என்பவரைக் காதலித்து வருகின்றார். இருவரும் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது இருவரும் தியேட்டருக்குச் சென்றுள்ளனர். அங்கே அவரது காதலன் பாப்கானைச் சாப்பிட்ட படியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement