• May 29 2023

காதர்பாட்சா படத்தில் இவர் தான் ஹேர்ஸ்டைலிஸ்ட்.. மகளுடன் கியூட் வீடியோ பகிர்ந்த ஆர்யா..!

Jo / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான ஆர்யா கடந்த 2016ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது நடிகை சாயிஷாவுடன் காதலில் விழுந்தா ஆர்யா தொடர்ந்து, தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இவர்களது குழந்தைக்கு அரியானா எனப் பெயரிட்ட நிலையில், ஆர்யா - சாயிஷா இருவரும் தொடர்ந்து தங்கள் குழந்தையின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் முன்னதாக ஆர்யா தன் குழந்தை அரியானாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்துக்கான என் ஹேர்ஸ்டைலிஸ்ட் இவர் தான் எனவும் க்யூட்டாக கேப்ஷன் ஒன்றை ஆர்யா பதிவிட்டுள்ளார்.

தங்கள் மகள் அரியானாவின் புகைப்படங்களை ஆர்யா - சாயிஷா தம்பதி தொடர்ந்து அவருக்கென தனியாகத் தொடங்கியுள்ள இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆர்யா தற்போது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்  படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகை சித்தி இத்னானி இப்படத்தில் ஹிரோயினாக நடித்துள்ள நிலையில், முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். கிராமத்துப் பையனாக இப்படத்த்தில் ஆர்யா வெகுநாள்களுக்குப் பிறகு நடித்துள்ள நிலையில், பிரபு, பாக்யராஜ், விஜி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விருமன் பட வெற்றிக்குப் பிறகு முத்தையா இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியான நிலையில்,  கருப்பு வேட்டி, சட்டையில்  பாட்ஷா பட ரஜினி ஓவியத்துக்கு முன்னால் ஆர்யா அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரும் வெளியாகி நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. மத ஒற்றுமையை வலியுறுத்தும் படமாக இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுபுறம் நடிகை சாயிஷா முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். குழந்தைப்பேறுக்குப் பிறகு பத்து தல படத்தில் இடம்பெற்ற ராவடி எனும் பாடலுக்கு முதன்முறையாக நடனமாடியுள்ள சாயிஷா,  தொடர்ந்து நடிக்கவும் விருப்பம் காண்பித்து வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement