• May 08 2024

ஷாருக்கானின் ஜவான் டீசர் டீட்டெய்ல்ஸ் லீக்...அதிர்ச்சியில் ரசிகர்கள்... அவசரமாக நாள் குறித்த அட்லீ!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான், பாய்காட் பிரச்சினைகளை கடந்து ஆயிரம் கோடி வசூலித்தது. இதனால், ஷாருக்கான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜவான் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதன்முறையாக பாலிவுட் சென்றுள்ள அட்லீ, இந்தப் படத்தை இயக்கி வருகின்றார்.

ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜவான் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அத்தோடு, நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைத்து வருகின்றார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை, ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜவான் டைட்டில் டீசர் வெளியான போதே, படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது.எனினும் அதன்படி இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ளது. அதேநேரம் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் ஜவான் ரிலீஸ் தள்ளிப்போகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ஜவான் டீசர் ரெடியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அத்தோடு, ஜவான் டீசரின் ரன்னிங் டைம் உள்ளிட்ட சில தகவல்களும் லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த டீசர் 1.54 ரன்னிங் டைம் உடன் வெளியாகவுள்ளது. மேலும், சென்சாரில் ஜவான் டீசருக்கு U/A சர்டிஃபிகேட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜவான் முதல் டீசரான இது நேற்றுதான் (ஏப்.26) சென்சார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும்இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

அதனால், ஜவான் டீசரை மே முதல் வாரத்தில் வெளியிட இயக்குநர் அட்லீ முடிவு செய்துள்ளாராம். இதனால் ஜவான் டீசரை எதிர்பார்த்து ஷாருக்கான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஜவான் டீசர் மே முதல் வாரத்தில் வெளியானால், படமும் சொன்னபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜவான் ஷூட்டிங்கை சொன்னபடி முடிக்காமல் அட்லீ லேட் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் பதான் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் ஜவான் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் என பாலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஷாருக்கானும் ஜவான் படத்தின் வசூலை அதிகம் எதிர்பார்த்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement