• Apr 27 2024

ஷாருக்கான்-நயன்தாராவின் செம Romantic பாடல் - எப்போ ரிலீஸ் தெரியுமா?வெளியான சூப்பர் 'ஜவான்'அப்டேட்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் தான் அட்லீ…ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த அட்லீ அடுத்ததாக இயக்கி வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜவான்.இந்த படத்தின் அடுத்த பாடல் வரவுள்ளது.


ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க , இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.நயன்தாரா,அட்லீ ,அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர்.ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது சமீபத்தில் ட்ரைலர் வந்து வைரல் ஆகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜவான் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டே உள்ளது.அந்த வகையில் அண்மையில் அனிருத் இசையில் ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

வந்த இடம் என தொடங்கும் அப்பாடலை தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அனிருத்தே பாடி இருந்தார் அந்த பாடல் இணையத்திலும் வைரலாகி செம மாஸ் காட்டி இருந்தது.

இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளார்.இப்பாடல் மேக்கிங்கின் மூலம் இப்பாடலில் அட்லீயும் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடனமாடி உள்ளது தெரியவந்துள்ளது அந்த வீடியோ இந்த மேக்கிங்கில் உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் பற்றிய அப்டேட் வந்துள்ளது அனிருத் பாடியுள்ள பாடல் இது ஒரு காதல் பாடல்,இந்த பாடல் நாளை வரவுள்ளது..

Advertisement

Advertisement

Advertisement