• Sep 27 2023

ஷாலினியின் தந்தைக்கு இப்படி ஒரு திறமையா..? எப்படி பாடுறார் பாருங்க... வைரல் வீடியோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஷாலினி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளை வென்றிருக்கின்றார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து "பேபி ஷாலினி" என புகழ் பெற்ற இவர், பின்னர் கதாநாயகியாக 1997-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். 


இவரின் திரைப்படங்களில் ஷாலினி ஏற்று நடிக்கும் கதாபாத்திரமானது மிகவும் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை எளிதாக கவரும் வகையில் அமைந்திருக்கும். குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் விஜய், அஜித், மாதவன், பிரசாந்த் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.

மேலும் இவர் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய நடிகரான அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டமை நம் அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு தற்போது ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.


அதுமட்டுமல்லாது ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற அண்ணனும் உள்ளனர். இருவரும் திரையுலகில் நடிகர், நடிகையாக பணியாற்றி வருகின்றனர். அத்தோடு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டிருந்த இவரின் தந்தை, தனது பிள்ளைகளின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றி கொண்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது ஷாலினியின் தந்தை பாபுவுக்கு இசை மீது எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இவர் டி.எம்.சௌந்தரராஜனின் தீவிர ரசிகராவார். இதனால் ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டிஎம்எஸ்ஸின் பாடல்கள் பாடி இருக்கின்றார்.

இந்நிலையில் பாபு அவர்கள் தற்போது எ எஸ் பி என்ற யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனக்கு பிடித்த பாடல்களை பாடி வெளியிட்டு வருகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்கள் குரல் அச்சு அசலாக டி.எம்.எஸ் உடைய குரல் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement